Latestஉலகம்

துருக்கியில் வேகமாக பரவும் காட்டுத்தீ; 50,000 மக்கள் வெளியேற்றம்

அங்காரா, துருக்கி, ஜூலை 1 – கடந்த ஞாயிற்றுகிழமை, துருக்கி வனப்பகுதியில், காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக வெளியேற்றி தற்காலிக பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றியுள்ளனர் என்று உள்ளூர் பேரிடர் நிறுவனம் அறிவித்துள்ளது.

காட்டுத்தீயால் ஏற்பட்ட புகையினாலும் மற்றும் பிற பிரச்சினைகளாலும் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தத் தீயிலிருந்து தங்களைத் தற்காத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பலத்த காற்றினால் தீயை கட்டுப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோலைப் பயன்படுத்தி காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக நம்பப்படும் சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துருக்கியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் இத்தகைய பிரச்சினைகளைக் களையும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் ஈடுபட வேண்டுமென்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!