
கோலாலம்பூர், செப்டம்பர் 25 –
பிக்-டெய்ல் மக்காக் (pig-tailed macaque) குரங்கை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர், இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்.
கடந்த ஜூலை 2ஆம் தேதி பத்து மூடா பி.பி.ஆர். குடியிருப்பு பகுதியில் உரிமம் இன்றி குரங்கை வைத்திருந்ததற்காக உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட ஆடவர் குற்றம் சாட்டப்பட்டார்.
சூழலியல் அழிவால் ஆபத்தான நிலையில் உள்ள இந்த குரங்கினம், மலேசியாவில் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனை வைத்திருப்பதற்கு வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறை (Perhilitan) வழங்கும் உரிமம் மிக அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த வழக்கு நவம்பர் 15ஆம் தேதி மறுபரிசீலனைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது