
சென்னை, அக்டோபர்-5 – உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்புள்ளார்.
வீடு திரும்பினாலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில வாரங்கள் அவர் வீட்டிலேயே முழு ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 30-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 வயது ரஜினிகாந்துக்கு, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கத்தை சரி செய்ய, அறுவை சிகிச்சை இல்லாமலேயே stent பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் மருத்துவமனையில் இருந்த போது நலம் விசாரித்த மற்றும் நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் X தளம் வாயிலாக ரஜினிகாந்த் நன்றித் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தனது நெருங்கிய நண்பரும் பிரதமருமான நரேந்திர மோடி, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, போலீவூட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு அவர் நன்றி கூறினார்.
திரையுலக நண்பர்கள், இரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வரும் வாரத்தில் ‘வேட்டையன்’ படம் திரைக்கு வரும் நிலையில் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார்.