
ஹைதராபாத், ஜூலை-2 – தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவில் இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 45-த்தை தாண்டியுள்ளது.
35 பேர் காயமடைந்துள்ளனர்.
இடிபாடுகளிலிருந்து மேலும் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
முக்கியத் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அந்தத் தொழிற்சாலையில் வாரக் கடைசியில் ஓர் உலை வெடித்து, பெரும் தீ ஏற்பட்டது.
அப்போது அங்கு 143 தொழிலாளர்கள் இருந்ததாகவும், வெடிப்பின் வேகத்தால் பலர் தூக்கி வீசப்பட்டதாவும் கூறப்பட்டது.
உலை வெடிப்பு மற்றும் தீ விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் இரசாயன வாசனையும் புகையும் பரவியது.
இந்நிலையில், சேதமடைந்த ஆலை 90 நாட்களுக்கு மூடப்படுமென அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு 10 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குவது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்துடன் கலந்துபேசப்படும் என, தெலங்கானா முதல் அமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்