Latestமலேசியா

தெலுக் இந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா உதவி

தெலுக் இந்தான், அக் 25 – அண்மையில் தெலுக் இந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்தியர்கள் அதிகமாக இருக்கும் பல்வேறு குடியிருப்பு இடங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தாமான் முஹிபா Batu 6 குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்குள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார். இந்த விவகாரம் தங்களது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ம.இ.காவின் ஏற்பாட்டில் பொருள் உதவிகள் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டாதாக கம்போங் குரு தெலுக் இந்தான் ம.இ.கா கிளையின் தலைவர் என்.ரகுநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் தொகுதி தலைவர் மணிக்கண்டன் மற்றும் சில கிளைத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை பட்டியலிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே பருவ மழைக் காலத்தில் கடுமையாக மழை பெய்யும்போது இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதாகவும் ஏற்கனவே இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணப்படாதது குறித்து தாமான் முஹிபா
Batu 6 மக்கள் தங்களது ஏமாற்றத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பத்து அன்னாம் ஆற்றின் அனைக்கட்டு தற்போது மூன்றாவது முறையாக உடைந்ததால் இம்முறையும் வெள்ளத்தினால் பத்து அன்னாம், தாமான் தேசா அமான், தாமான் கம்போங் செலபா , கம்போங் பஞ்சார், பத்து லாப்பான் சங்காட் ஜோங், தெலுக் இந்தான் நகர் ஆகிய பகுதிகளில் மோசமாக வெள்ளம் ஏற்பட்டதாக ரகுநாதன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!