
மேட்ரிட், ஜூலை-9 – ஸ்பெயினில் கடந்த வாரம் சாலை விபத்தில் அகால மரணமடைந்த லிவர்பூல் கால்பந்து வீரல் டியோகோ ஜோத்தா, சம்பவத்தின் போது காரை படுவேகமாக ஓட்டியிருக்கக் கூடும்.
இதுவரையிலான விசாரணையின் படி, ஜோத்தா ஓட்டிய கார் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறியிருப்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, இன்னொரு வாகனத்தை முந்திச் செல்லும் போது காரின் டயர் வெடித்தே ஜோத்தாவும், உடனிருந்த அவரின் தம்பி ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
அவ்விபத்தில், கார் தீப்பற்றி எரிந்ததில் போர்ச்சுகல் தேசிய வீரருமான 28 வயது ஜோத்தாவும், 25 வயது சில்வாவும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் தான் அவர் தனது நீண்ட நாள் காதலியை மணம் முடித்ததும் குறிப்பிடத்தக்கது.
மே மாதம் லிவர்பூல் அணியுடன் இங்லீஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தையும் ஜூனில் போர்ச்சுகல் தேசிய அணியுடன் Nations League கிண்ணத்தையும் வென்ற ஜோத்தாவின் மரணம் கால்பந்து இரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.