
திருவனந்தபுரம், பிப்ரவரி-26 – தென்னிந்திய மாநிலம் கேரளாவில், 13 வயது தம்பி உட்பட 6 பேரை தான் கொலைச் செய்திருப்பதாக போலீஸ் நிலையத்திற்குச் சென்று 23 வயது இளைஞன் வாக்குமூலம் கொடுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விசாரித்ததில் தம்பி, பாட்டி, சித்தப்பா, சின்னம்மா, தோழி ஆகிய ஐவரை அவன் படுகொலைச் செய்தது அம்பலமானது;
சுத்தியலால் தாக்கப்பட்ட அவனது தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் 3 கிராமங்களில் அத்தொடர் கொலைகளை Afan எனும் அவ்விளைஞன் அரங்கேற்றியுள்ளான்.
கொலைக்குப் பிறகு விஷம் குடித்ததால் போலீஸார் அவனை முதலில் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் பணப் பிரச்னையே அக்கொலைகளுக்குக் காரணம் என Afan போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
அதே சமயம், அவனது தோழி 2 நாட்களாக வீட்டில் தங்கியதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதாக கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.
Afan-னின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்வதால் அவர் உயிர் தப்பினார்.