
கோலாலம்பூர், ஏப்ரல்-20, கோலாலம்பூரில் ஒரு கண்காட்சியின் போது பிறையில்லாத மலேசியக் கொடியை காட்சிப்படுத்திய தவற்றுக்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமொன்று மன்னிப்புக் கோரியுள்ளது.
கோலாலம்பூர் Mid Valley பேரங்காடியின் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் கண்காட்சியின் போதே, Singapore Lactation Bakes நிறுவனம் அத்தவற்றைச் செய்தது.
ஜாலூர் கெமிலாங் கொடி, மலேசிய இறையாண்மை, பாரம்பரியம் மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாகும்.
அதனை நாங்கள் மதிக்கிறோம்.
இது தெரியாமல் நடந்த தவறு; கவனக்குறைவுக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறோம் என அந்நிறுவனம் கூறியது.
இவ்வேளையில், அந்நிறுவனத்தின் கண்காட்சிக் கூடாரம் மூடப்பட்டு, உள்விசாரணை நடைபெற்று வருவதாக TCE Baby Expo கண்காட்சி ஏற்பாட்டாளர் கூறினார்.
நடந்த தவற்றுக்கு ஏற்பாட்டாளர் என்ற முறையில் மலேசியர்களிடம் தாங்களும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அதன் பேச்சாளர் சொன்னார்.
நாட்டில் இத்தகையச் சம்பவங்கள் நடப்பது ஒரு வாரத்தில் இது மூன்றாவது தடவையாகும்.
இதற்கு முன் AI-யில் உருவாக்கப்பட்ட மலேசியக் கொடி பிறையில்லாமல் இருந்ததை சரியாக கவனிக்காமல் பிரசுரம் செய்து, Sin Chew Daily, Kwong Wah Yit Poh ஆகிய 2 சீன நாளேடுகள் பெரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்க