
தென் கொரியா, நவம்பர் 17 – தென் கொரியாவில், சுமார் 5,00,000 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவு தேர்வில் கலந்துகொண்ட நேரத்தில், அனைத்து விமான போக்குவரத்தும் சுமார் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
ஆங்கில தேர்வின் ‘Listening Section’ நடைபெறும் பொழுது வேறு எவ்விதமான சத்தங்களும் மாணவர்களுக்கு இடையூறாக இருந்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் கொரியாவின் பல்கலைக்கழக நுழைவு தேர்வுகள் உலக அரங்கில் மிகக் கடுமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களின் சத்தம் கூட மாணவர்களின் கவனத்தைத் தடுத்து, தேர்வின் தரத்தை பாதிக்கக்கூடும் என்பதால் கொரிய அரசு இம்முடிவினை எடுத்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், மாணவர்கள் முழு கவனத்துடன் தேர்வை எழுத முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



