
அலோர் ஸ்டார், ஜனவரி-21-வரும் தைப்பூசத்திற்கு கெடா மாநில அரசாங்கம் சம்பவ விடுமுறையை அறிவித்துள்ளது.
மாநில இந்துக்கள் தைப்பூசத்தை கொண்டாட ஏதுவாக பிப்ரவரி 1, ஞாயிற்றுக் கிழமை இந்த சிறப்பு விடுமுறையை வழங்க ஆட்சிக் குழுக் கூட்டத்தில் முடிவானதாக, கெடா அரசாங்க செயலகம் அறிக்கையொன்றில் கூறியது.
தைப்பூசம் தேசிய பொது விடுமுறை அல்ல; இந்துக்கள் அதிகமுள்ள சிலாங்கூர், பேராக், ஜோகூர், பினாங்கு, கோலாலாம்பூர் போன்ற குறிப்பிட்ட மாநிலங்கள் மட்டுமே பொது விடுமுறையாக அனுசரிக்கின்றன.
கெடாவிலும் பொது விடுமுறை இல்லாத காரணத்தால், ஆண்டுதோறும் சம்பவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
பத்து மலை, பினாங்கு தண்ணீர் மலை, ஈப்போ கல்லு மலை ஆகிய இடங்களுக்கு அடுத்து கெடாவில் சுங்கைப் பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தான தைப்பூசம் பிரசித்திப் பெற்றதாகும்.



