
ரவாங், ஜனவரி-17,சிலாங்கூர், ரவாங், கம்போங் மெலாயு, அல்-ஹிடாயா பள்ளிவாசல் வளாகத்தில் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொப்புள் கொடி அறுக்கப்படாத அக்குழந்தை நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு அங்கு காணப்பட்டதாக, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார்.
‘Pureen’ என்ற எழுதப்பட்டிருந்த வெள்ளை நிற சட்டையில், போர்வையால் குழந்தையின் உடல் சுற்றப்பட்டிருந்தது.
அடையாள ஆவணங்கள் எதுவும் உடன் கண்டெடுக்கப்படவில்லை.
மேல் நடவடிக்கைக்காக குழந்தையின் சடலம் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால் முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு போலீஸ் கேட்டுக் கொண்டது.