
புத்ராஜெயா, பிப்ரவரி-23-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, தொலைத்தொடர்பு நிறுவனமொன்றின் முன்னாள் இயக்குநரை கைதுச் செய்துள்ளது.
50 வயது மதிக்கத்தக்க அந்நபர், 2012-ஆம் ஆண்டு ஒரு வங்கியின் குழும நிர்வாக இயக்குநருக்கு 8 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
இந்த லஞ்சப் பணம், fibre optic திட்டத்திற்கான 400 மில்லியன் ரிங்கிட் வங்கிக் கடனைப் பெறுவதற்காக வழங்கப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
கடன் நிபந்தனைகளை பூர்த்திச் செய்ய, போலியான விவரங்களுடன் கூட்டு உத்தரவாத ஆவணத்தை அவர் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
கைதான ஆடவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படுகிறார்.
MACC சட்டத்தின் கீழ் லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டும், குற்றவியல் சட்டத்தின் கீழ் போலி ஆவணங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்படுகின்றன.



