கோலாலம்பூர், செப்டம்பர் 2 – மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தென் கொரியாவின் சியோலுக்குப் புறப்பட்டது மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பி விடப்பட்டது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH66, நேற்று இரவு 11.50 மணிக்கு அனைத்துலக கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து சியோலுக்குப் புறப்பட்டதாக FlightRadar காட்டுகிறது.
ஆனால் நள்ளிரவு 12.34 மணியளவில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது மீண்டும் பாதுகாப்பாக கோலாலம்பூருக்கே திருப்பி விடப்பட்டுத் தரையிறங்கியது.
கடந்த சில வாரங்களில் விமான நிறுவனம் சம்பந்தப்பட்ட பல விமான தாமதங்கள் மற்றும் திசைதிருப்பல்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இயந்திர கோளாறு, தொழில்நுட்பக் கோளாறுகளில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவங்களில், இது சமீபத்தியது.