Latestமலேசியா

நச்சுப் பொருள் கலப்பு; 2 அழகுச் சாதனப் பொருட்களுக்கு உடனடி தடை விதித்த சுகாதார அமைச்சு

கோலாலம்பூர், அக்டோபர்-3 அட்டவணையிடப்பட்ட நச்சுப் பொருள் அடங்கியிருப்பதால் 2 அழகுப் பராமரிப்புப் பொருட்களுக்கான அனுமதிச் சான்றிதழை சுகாதார அமைச்சு (KKM) இரத்துச் செய்துள்ளது.

மெர்குரி எனப்படும் பாதரசம் கலந்திருக்கும் Snow White Treatment Cream மற்றும் Kak Ell Krim Rawatan இரண்டையும்
இந்நாட்டில் இனியும் விற்க முடியாது.

எனவே அவற்றின் விநியோகமும் விற்பனையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ Dr முஹமட் ரட்சி அபு ஹசான் (Datuk Dr Muhammad Radzi Abu Hassan) அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

மீறினால், 1984-ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

மெர்குரி உடலுக்குள் புகுந்தால் சிறுநீரகங்களையும் நரம்பு மண்டலத்தையும் பாதித்து விடும் என்பதாலேயே, அதனை அழகுச் சாதனப் பொருட்களில் அதன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.

அதோடு, சிறு குழந்தைகள் அல்லது வயிற்றிலிருக்கும் சிசுக்களின் மூளை வளர்ச்சியையும் அது பாதிக்கும்.

தோலில் அரிப்பு, எரிச்சல், சொறி சிரங்கு மற்றும் வேறு சில மாற்றங்களும் ஏற்படலாம்.

எனவே மேற்கண்ட இரு பொருட்களையும் பயன்படுத்தும் பொது மக்கள், உடனடியாக அதனை நிறுத்தி விட்டு, பக்க விளைவுகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை சென்று காணுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!