
சென்னை , மே 5 – தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்த நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்.
உடல் நலமின்றி இருந்த 67 வயதுடைய சாந்தி இன்று காலை 10.30 மணியளவில் இறந்தார்.
கவுண்டமணியும் சாந்தியும் 1963ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்த தம்பதியருக்கு செல்வி மற்றும் சுமித்திரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சாந்தி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தபோதிலும் , அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து இறந்தார்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி இறந்ததைத் தொடர்ந்து கவுண்டமணி பெரும் சோகத்தில் உள்ளார்.
அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் சாந்தியின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.