Latestஉலகம்

நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் பிரபு வருத்தம்; தொடர்புக் கொள்ள முயற்சிப்பதாக தகவல்

சென்னை, ஏப்ரல்-15, கடந்த சில நாட்களாகவே இணையத்தில், ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஸ்ரீ பற்றிய பேச்சாகத் தான் உள்ளது.

2006-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ எனும் தொடரின் மூலம் பிரபலமானவர், பின்னர் ‘ஓயாயும் ஆட்டுக்குடியும்’ ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வளர்ந்து வரும் இளம் நடிகர் என்பதை நிரூபித்தார்.

எனினும், பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் போனவர் சில தினங்களுக்கு முன்னர் தான், Instagram பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டு இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

நல்ல கலையான அதே சமயம் கதாநாயகனுக்குரிய வசீகரமான தோற்றத்துடன் இருந்தவரான ஸ்ரீ, அந்தப் புகைப்படத்தில் சரியாகப் பராமரிக்கப்படாத நீண்ட தலை முடியுடன், எலும்பும் தோலுமாக காட்சியளித்தார்.

இன்னொரு நாள் வெளியான படத்தில் அவர் செம்பட்டைத் தலையுடன் மீசை தாடி மழிக்கப்பட்டும் இருந்தார்.

இதையடுத்து, இணைய ஊடகங்கள் மற்றும் இரசிகர்கள் மத்தியில், அவர் போதைப் பொருள் உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையானது உள்ளிட்ட பல்வேறு யூகங்கள் எழுந்தன.

அவர் கடைசியாக நடித்த ‘இறுகப்பற்று’ படத்தில் சம்பளம் வழங்கப்படாததால், மன அழுத்தமேற்பட்டு, அதனால் அவர் இப்படி ஆகிவிட்டதாகவும் சிலர் அவதூறு பரப்பினர்.

இந்நிலையில், அப்படத்தின் தயாளரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, ஸ்ரீ குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஸ்ரீயின் உடல் நலம் குறித்து அக்கறைக் கொண்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் நீண்ட நாட்களாகவே அவரைத் தொடர்புக் கொள்ள முயற்சித்து வருவதாகவும் கூறினார்.

எப்படியாவது அவரை தொடர்புக் கொண்டு, நல்ல உடல் நலத்துடன் அவரை மீட்டுக் கொண்டு வருவது தான் முதல் கடமை; அதற்கு யாரேனும் உதவி செய்ய வந்தால் அவர்களுக்கு நன்றியுள்ளவர்காளாக இருப்போம் என பிரபு பதிவு செய்துள்ளார்.

வலைத்தளங்களில், இரசிகர்களும், எப்படியாவது ஸ்ரீயை மீட்டு வருமாறு பிராத்திக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!