பாரீஸ், டிசம்பர்-5 – பிரதமர் மைக்கல் பார்னியே (Michael Barnier) தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டுள்ளது.
பார்னியே மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையெனக் கூறி, 331 வலச்சாரி மற்றும் இடச்சாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை அடுத்து அரசாங்கம் கவிழ்ந்தது.
1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக அத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பிரான்சில் அரசியல் நிலைத்தன்மை உருவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் முடிவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பார்னியே, பிரச்னை இதோடு நின்று விடவில்லை; இனிமேல் தான் கடினமாகும் என்றார்.
எது எப்படி இருந்தாலும் 4 மாதங்களாக பிரதமராக பணியாற்ற கடைத்த வாய்ப்புக்காக நாட்டுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
நாட்டின் கடன்களைக் குறைப்பதாகக் கூறிக்கொண்டு, அரசாங்க செலவினத்தில் 60 பில்லியன் டாலரை குறைத்து வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ததிலிருந்து பார்னியே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதிபர் இமானுவேல் மெக்ரோன் புதியப் பிரதமரை விரைவிலேயே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.