
சிப்பாங், ஜூலை 1 – இன்று, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA1ல் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஏரோட்ரெய்னையில் பயணம் மேற்கொண்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதன் செயல்திறனை வெகுவாக பாராட்டி முன்பை விட ஏரோட்ரெய்ன் இன்னும் வேகமாக நகர்கின்றது என்று குறுப்பிட்டுள்ளார்.
மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், MAHBயின் நிர்வாக இயக்குனர் டத்தோ முகமது இசானி கானி, மற்றும் மூத்த MAHB அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து பிரதமர் அன்வார் இன்று மேம்படுத்தப்பட்ட ஏரோட்ரெய்ன் (Aerotrain) சேவையை பயன்படுத்தினார்.
இதனிடையே இன்று முதல் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நவீனமயமாக்கப்பட்ட ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை அதிகாரபூர்வமாக தொடங்கியது.
மேம்படுத்தப்பட்ட இந்த ஏரோட்ரெயின் கடந்த 6 மாதங்களாக நிலப் போக்குவரத்து நிறுவனமான APADன் கடுமையான சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
தினமும் 100,000க்கும் மேற்பட்ட பயணிகள் ஏறி செல்லும் இந்த மேம்படுத்தப்பட்ட ஏரோட்ரெய்ன் அமைப்பு, 2026 ஆம் ஆண்டு மலேசிய வருகை ஆண்டிற்கு முன்னதாகவே பெரும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிப்படுவது குறிப்பிடத்தக்கது.