நாட்டில் அதிகரித்து வரும் Influenza நோய் தொற்று; இடைநிலைப்பள்ளிகளில் புதிய ‘கிளஸ்டர்கள்’

கோலாலம்பூர், அக்டோபர் 16 –
நாட்டில் ‘Influenza’ நோய் தொற்றுக் கிளஸ்டர்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளிகளில் கடந்த இரண்டு வாரங்களிலேயே அந்த நோய் தொற்று 1 லிருந்து 65 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலிருக்கும் மொத்த கல்வி மையங்களில் கிளஸ்டர்கள் 8-லிருந்து 202 ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து ஆரம்ப பள்ளிகளில் 3 இலிருந்து 72 ஆக அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சுகாதார அமைச்சர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல்நிலையை கவனிக்க வேண்டும் என்றும், காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் பள்ளிக்கு வராமல் இருக்க அறிவுறுத்தினார்.
பெரும்பாலானோர் ஒரு வாரத்துக்குள் குணமடைந்தாலும் குழந்தைகள், முதியவர்கள், மற்றும் நீண்டநாள் நோயாளிகள் இந்த நோயினால் அதிக ஆபத்திற்கு ஆளாகுகின்றனர்.
தற்போதைய தொற்றுநோயியல் வாரமான ME 42 அதாவது அக்டோபர் 12 முதல் 16 வரை கிளஸ்டர்கள் 56 ஆக குறைந்தாலும், தொற்று பரவல் தொடர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.