Latestமலேசியா

நாட்டில் இனவெறிக்கு இடமில்லை; ‘கெலிங்’ சோள வியாபாரி சர்ச்சை குறித்து ஒருமைப்பாட்டு அமைச்சர் நினைவுறுத்து

கோலாலம்பூர், பிப்ரவரி-16 – நாட்டில் பல்லின – மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு பேச்சையும் நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் (Aaron Ago Dagang) திட்டவட்டமாகக் கூறினார்.

மற்றவர் மனம் புண்படும்படி நடந்துக் கொள்ளாமல் மக்கள் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென தனது X தளத்தில் அவர் தெரிவித்தார்.

தேசியக் கோட்பாடுகளுக்கு ஏற்ப, இனத்துவேசங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார் அவர்.

சிலாங்கூர், செப்பாங்கில் சாலையோரம் சோளம் விற்கும் மலாய்க்கார குடும்பம், இனவெறியிலான அறிவிப்பு அட்டையை வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.

“இங்கு கெலிங்கிற்கு சோளம் கிடையாது” என அநாகரீகமாக அறிவிப்பு வைக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

மலேசியர்களின் சகிப்புத் தன்மைக்கும், ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்புக்கும் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக அண்மையத் தைப்பூச விழா திகழ்ந்தது.

ஆனால் அந்த இணக்கமானச் சூழலைக் கெடுக்கும் விதமாக ஆங்காங்கே இது போன்ற இனவெறி சம்பவங்கள் நடப்பது வேதனையளிக்கிறது.

ஆகவே அந்த சோள வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!