Latestமலேசியா

நாட்டில் எரிபொருள் விநியோகம் நிலையாக உள்ளது, பற்றாக்குறை இல்லை – உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு

கோலாலம்பூர், மார்ச்-25-நாட்டில் எரிபொருள் விநியோகம் நிலையாக உள்ளது என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் அலி உத்தரவாதம் அளித்துள்ளார்.

பெட்ரோல், டீசல், LPG எரிவாயு என எந்த எரிபொருளுக்கும் பற்றாக்குறை இல்லை என்றார் அவர்.

பெருநாள் காலங்களில் சில இடங்களில் சிறிய விநியோக தாமதங்கள் ஏற்பட்டாலும், பொதுவில் நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எனவே, மக்கள் தேவையில்லாமல் பீதி அடைந்து எரிபொருளை வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வாகனத்துக்கு வெளியே அனுமதி இல்லாமல் எரிபொருள் சேமிப்பது சட்டவிரோதம் என்றும் அவர் எச்சரித்தார்.

விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெட்ரோல் நிலையங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அர்மிசான் கேட்டுக் கொண்டார்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!