Latestஉலகம்

“நான் எங்கும் போகவில்லை” லூயிஸ் ஹெமில்டன் திட்டவட்டம்

மாரானேலோ (இத்தாலி), பிப்ரவரி-22-F1 கார் பந்தய ஜாம்பவான் லூயிஸ் ஹெமில்டன், “நான் எங்கும் போகவில்லை” என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

41 வயதான இந்த 7 முறை உலக சாம்பியன், தனது 20-வது பருவத்தில் Ferrari அணியுடன் பங்கேற்கிறார்.

கடந்தாண்டு Ferrari-யுடன் சேர்ந்த முதல் பருவத்தில் வெற்றியோ, அல்லது முதல் 3 இடங்களில் ஒன்றோ எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை.

ஆனால், Bahrain-னில் நடைபெற்ற பருவத்திற்கு முந்தைய சோதனை ஓட்டத்துக்குப் பிறகு, புதிய உற்சாகத்துடன் இருப்பதாகவும், தமதணியின் கடின உழைப்புக்கு நன்றி தெரிவித்ததாகவும் ஹெமில்டன் கூறினார்.

கடந்த பருவத்தில் தன்னம்பிக்கை குறைந்திருந்ததை ஒப்புக்கொண்ட அவர், இனி அந்த மனநிலையை இரசிகர்கள் காணமாட்டார்கள் என உறுதியளித்தார்.

ஹெமில்டனின் கடைசி பந்தய வெற்றி 2024-ல் Belgian GP-யாகும்.

கடைசி சாம்பியன் பட்டம் 2020-ல் பெற்றதாகும்.

என்றாலும், இன்னும் தன்னிடம் சக்தி இருக்கிறது என்பதை நிரூபிக்க தாம் தயாராக உள்ளதாக அவர் சூளுரைக்கிறார்.

2026 F1 பருவம் மார்ச் 7-ஆம் தேதி ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்துடன் தொடங்குகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!