
புது டெல்லி, டிசம்பர் 25-தாய்லாந்து-கம்போடியா எல்லையில் இந்து தெய்வச் சிலை இடிக்கப்பட்டதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
இது மத உணர்வுகளை புண்படுத்தும் அவமதிப்பு என இந்திய வெளியுறவு அமைச்சு சாடியது
2014-ல் கம்போடியா எல்லையில் நிறுவப்பட்ட விஷ்ணு சிலை, அண்மைய எல்லை மோதலின் போது தாய்லாந்து படையினரால் இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, இவ்வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளும் கலாச்சார பாரம்பரியத்தை மதித்து, அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க வேண்டும் என புது டெல்லி வலியுறுத்தியது.
கம்போடியாவும் இந்த சிலைப் உடைப்பை கண்டித்து, மத தலங்களை பாதுகாக்க வேண்டும் என கோரியுள்ளது.
தாய்லாந்து – கம்போடிய எல்லை மோதலில் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், நிரந்தர தீர்வை நோக்கி அவைப் பயணிப்பதாகத் தெரியவில்லை.
என்றாலும், அழிவை விட பேச்சுவார்த்தையே முக்கியம் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது.



