
சுங்கை பூலோ, ஜூலை-24- சுங்கை பூலோவில் பூர்வக்குடி கிராமத்தில் நாய்கள் கடித்துக் குதறியதால் 19 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், குழந்தையின் மாமா கைதாகியுள்ளார்.
2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக, 19 வயது அவ்விளைஞர் கைதானதாக, மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார்.
வெறித்தனமான மிருகம் தாக்கி, கடித்துக் குதறியதே குழந்தையின் மரணத்திற்குக் காரணமென, சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறையின் மேற்கொள்ளப்பட்ட சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் போலீஸார் முன்னதாக மூவரின் வாக்குமூலங்களைப் பதிவுச் செய்தனர்.
குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி, அதன் மாமாவின் பாதுகாப்பில் விட்டு விட்டு பெற்றோர் வேலைக்குச் சென்றபோது அத்துயரம் நிகழ்ந்தது.
வரவேற்பறையில் மாமா தூங்கிக் கொண்டிருக்க, வீட்டிலிருந்து 20 மீட்டர் தொலைவில் இரத்த வெள்ளத்தில் அக்குழந்தை இறந்துகிடந்தது.
வேலை முடிந்து திரும்பிய பெற்றோர் குழந்ததை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்; எனினும், அது ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதிப்படுத்தப்பட்டது.