
கெனிங்காவ், நவம்பர்-6 – சபா, கெனிங்காவில் ஒரு நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர்.
வைரலான வீடியோ தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதால், விசாரணை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் கூறியது.
அந்த வீடியோவில், ஓர் ஆடவன் பிரம்பால் நாயை சரமாரியாக அடிக்க, அதனைக் கைப்பேசியில் பதிவுச் செய்த இன்னொரு ஆடவன் பின்னால் சிரிப்பதைக் கேட்க முடிகிறது.
சரமாரியாகத் தாக்கப்பட்டதில், நாய் அசைவற்று கிடப்பதும் வீடியோவில் தெரிகிறது.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், நாயைக் கொடுமைப் படுத்தி கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.