Latestமலேசியா

நிபோங் தெபாலில் மடக்கப்படும் மேஜையின் இரும்பில் சிக்கி சிறுமி மரணம்

நிபோங் தெபால், ஜன 2 – மடக்கப்படும் மேஜையின் இரும்பில்   சிக்கி ஆறு வயது சிறுமி பரிதாபமாக மரணம் அடைந்தார்.  நிபோங் தெபால்  (Nibong Tebal)   தாமான்ஸ்ரீ  புத்ராவில் (Taman Seri Putra) தனது வீட்டில் நிகழ்ந்த  அந்த துயரச் சம்பவத்தில்  நுர் அகுப்ஃபா  உமைரா அப்துல்லா ( Nur Aqifah Humaira Abdullah ) என்று அடையாளம் கூறப்பட்ட அந்த சிறுமி  பேரா பாரிட் புந்தார் (Parit Buntar)  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்தார்.  இச்சம்பவம் குறித்து மருத்துவமனையிலிருந்து  தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து  அச்சிறுமியின் வீட்டிற்கு விரைந்த போலீஸ்   மற்றும் தடயயியல் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.  வாடகைக்கு இருந்துவரும் தனது வீட்டின் பின்புறப் பகுதியில் Nur Aqifah    மாலை மணி  4.15 அளவில்  தனியாக விளையாடிக் கொண்டிருக்குபோது  இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

 

இந்த சம்பவத்தின்போது  அந்த சிறுமியின்  தாயார் மற்றும் அவளது 10 வயது சகோதரன்  ஆகியோர் வீட்டில் இருந்தனர்.  எனினும் அச்சிறுமி விளையாடிக்கொண்டிருந்த இடத்திலிருந்து  அவர்களுக்கு எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமி  அண்டை வீட்டுக்காரரின் உதவியோடு  மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டபோதிலும் சிகிச்சையின்போது இறந்ததை  பினாங்கு  போலீஸ் தலைவர்   டத்தோ  ஹம்சா அகமட் ( Datuk Hamzah Ahmad) உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!