நீச்சல் குளத்தில் 3 வயது சிறுவன் மரணம் விசாரணைக்கு பெற்றோர் அழைக்கப்படுவர்

கோலாலம்பூர், நவம்பர்- 3,
மலாக்கா டுரியான் துங்கால் தங்கும் விடுதியிலுள்ள நீச்சல் குளத்தில் வெள்ளிக்கிழமையன்று 3 வயது சிறுவன் சுயநினைவு இன்றி காணப்பட்டதை தொடர்ந்து, சிறார் அலட்சியம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும். அச்சிறுவனின் உடல் மலாக்கா மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு உடனடியாக கொண்டுச் செல்லப்பட்ட போதிலும் காலை மணி 11.45 அளவில் அவன் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாக அலோர் காஜா போலீஸ் தலைவர் அஸ்ருல் முகமட் தெரிவித்தார்.
2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் 31 (1) (a ) விதியின் கீழ் அலட்சியம், புறக்கணிப்பு, கைவிட்டது மற்றும் ஆபத்துக்கான வாய்ப்பை உருவாக்கியது தொடர்பில் அச்சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்படும் என அஸ்ருல் கூறினார். இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் பெற்றோருக்கு 20 ஆண்டுகள்வரை சிறை ,
50,000 ரிங்கிட் அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம்.



