Latestமலேசியா

நீதிக்கான ஒரு தாயின் நடைப்பயணம்: புக்கிட் அமானுக்கு இந்திரா காந்தி வரலாற்று சிறப்புமிக்க பேரணி

கோலாலாம்பூர், நவம்பர்-4,

போராட்டமும் ஏமாற்றமும் கலந்த 15 வருட காத்திருப்புக்குப் பிறகு, வரும் நவம்பர் 22 ஆம் தேதி கோலாலாம்பூர் SOGO-விலிருந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் வரை “நீதி கேட்டு நடைப்பயணம்” செல்கிறார் இந்திரா காந்தி…

அந்த 4 கிலோமீட்டர் பேரணி, மகள் பிரசனா தீக்சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற இந்திராவின் கைவிடாத போராட்டத்தைக் குறிக்கிறது.

மகளை தாயுடன் சேர்த்து வைக்க கூட்டரசு நீதிமன்றமே உத்தரவிட்ட போதிலும், இந்திரா இன்னமும் நிராயுதபாணியாக உள்ளதாக, INGAT எனப்படும் இந்திரா காந்தி பணிப் படையைச் சேர்ந்தவரும், ஆகமம் அணி மலேசியாவைச் சேர்ந்தவருமான வழக்கறிஞர் அருண் துரைசாமி கூறினார்.

எனவே, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறியதற்காக போலீஸ் படைத் தலைவர் மீது ஒரு புதிய குற்றவியல் வழக்கை ஒப்படைப்பதையும் இந்த பேரணி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் அவர்.

ஒருதலைபட்ச மதமாற்றத்தால் பிள்ளை வளர்ப்பு உரிமைப் பிரச்னையில் சிக்கி 15 ஆண்டு காலம் போராடி வரும் ஒரு தாயின் ஏக்கத்தையும் வேதனையும் அதிகாரத் தரப்புக்கு உணர்த்த இந்த நடைப்பயணம் விரும்புகிறது.

எனவே, இன மத வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் இதில் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!