Latestஉலகம்

நெத்தன்யாஹு உயிருடன் உள்ளார்; வதந்திகளுக்கு இஸ்ரேல் மறுப்பு

ஜெருசலம், மார்ச்-15-இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு உயிருடன் உள்ளார்; அவரின் மரணம் குறித்த வதந்திகள் பொய்யானவை என அவரது அலுவலகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில், ஈரான் தாக்குதலில் நெத்தன்யாஹு உயிரிழந்தார் எனக் கூறிய போலி வீடியோக்கள் மற்றும் செய்திகள் பரவியதால் குழப்பம் ஏற்பட்டது.

எனினும், ‘இது போலி செய்தி’ எனக் கூறிய இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம், நெத்தன்யாஹு நலமுடன் நாட்டை வழிநடத்தி வருகிறார் என உறுதிப்படுத்தியுள்ளது.

AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் வதந்திகளை தூண்டியதாகவும், மக்கள் நம்பகமான தகவல் மூலங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரான் தாக்குதலில் நெத்தன்யாஹு கொல்லப்பட்டு விட்டதாகப் வதந்தி பரவிய நிலையில், அண்மையில் தொலைக்காட்சியில் அவர் தோன்றிய போது வலது கையில் ஆறாவது விரல் போல் தென்பட்டதாகவும், இதன் மூலம் அது AI வீடியோ என்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!