
மினா, டிச 8 – ஒரு கத்தோலிக்கப் பள்ளியிலிருந்து கடந்த மாதம் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்ட 100 பள்ளிப் பிள்ளைகளை நைஜீரிய அதிகாரிகள் விடுவித்துள்ளதாக ஐ.நா. வட்டாரம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன, இருப்பினும் சிறைபிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் 165 மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. நவம்பர் மாத இறுதியில், வட-மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் தங்கும் வசதியைக் கொண்ட பள்ளியில் இருந்து 315 மாணவர்களும் ஊழியர்களும் கடத்தப்பட்டனர்.
100 மாணவர்களும் குழந்தைகளும் தலைநகர் அபுஜாவை அடைந்துள்ளதாகவும் ,இன்று நைஜர் மாநிலத்தில் உள்ள உள்ளூர் அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக ஐ,நா தகவல் வெளியிட்டுள்ளது. அந்த பள்ளிப் பிள்ளைகள் பேச்சுவார்த்தை அல்லது ராணுவ பலத்தின் மூலமாக விடுதலை செய்யப்பட்டனரா என்பது குறித்த விவரங்கங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடத்தல்காரர்களால் இன்னும் பிணையாக பிடித்து வைத்துள்ள பள்ளிப் பிள்ளைகளின் தலைவிதியைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் 100 பிள்ளைகளின் விடுதலை உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



