ஜோகூர் பாரு, ஜனவரி-18 – ஜோகூர் பாருவைச் சேர்ந்த பாலர் பள்ளி ஆசிரியை ஒருவர், இல்லாத ஒரு பகுதி நேர வேலை வாய்ப்பை நம்பி 30,759 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
எளிதான வேலை, கைநிறைய கமிஷன் என்ற பெயரில் facebook விளம்பரத்தால் 28 வயது அப்பெண் கவரப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜனவரி 15,16-ஆம் தேதிகளில் 3 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 11 தடவையாக 32,039 ரிங்கிட்டை அவர் மாற்றினார்.
ஆனால் அவருக்கு கமிஷனாக வந்ததோ வெறும் 1,280 ரிங்கிட் மட்டுமே.
மாறாக, மேலும் மேலும் பணம் கட்டுமாறு நச்சரிக்கப்பட்ட போதே, தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை அவர் உணர்ந்துள்ளார்.
இதையடுத்து அவர் போலீஸில் புகார் செய்ய, அவர் பணம் போட்ட வங்கிக் கணக்குகளில் ஒன்று ஏற்கனவே மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.