Latestமலேசியா

செம்பனைத் தோட்டத்தில் சுற்றித் திரிந்த 100 கிலோ சூரியக் கரடி சிக்கியது

பெசூட், ஏப்ரல்-18, திரங்கானு, உலு பெசூட்டில் செம்பனைத் தோட்டமொன்றில் சுற்றித் திரிந்த 100 கிலோ கிராம் எடையிலான சூரியக் கரடி நேற்று பிடிபட்டது.

ஏப்ரல் 12-ஆம் தேதி கிராம மக்கள் கொடுத்த புகாரை அடுத்து அப்பகுதியில் உடனடியாக பொறி கூண்டு பொருத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று அந்த ஆண் கரடி பிடிபட்டதாக, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னின் திரங்கானு கிளைத் தலைவர் லூ கியான் சியோங் கூறினார்.

பிடிபட்ட போது அதற்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அதன் சொந்த வாழ்விடத்திலேயே அது பாதுகாப்பாக விடப்பட்டதாக அவர் சொன்னார்.

வனவிலங்குகள் தங்களின் விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்தால் உடனடியாகத் PERHILITAN-னிடம் தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!