
கோலாலம்பூர், ஜன 13 – இம்மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் நடைபெறவிருக்கும் ஒற்றுமை பொங்கல் விழாவில் பல்வேறு கலச்சார போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி DSK குழுமத்தின் தலைவரும் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ சிவக்குமார் கேட்டுக்கொண்டார். கோலம் போடும் போட்டி, பொங்கல் வைக்கும் போட்டி உரி அடிக்கும் போட்டி உட்பட நமது கலச்சாரத்தையும் பாரம்பரித்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இவற்றில் ஆர்வத்தோடு கலந்து கொள்ளும்படி அவர் வலியுறுத்தினார்.
எதிர்வரும் தைக்பூச திருநாளுக்கு பத்துமலை திருத்தலத்தில் கூடும் பக்தர்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படவிருக்கிறது. இந்த அன்னதான நிகழ்ச்சியில் அனைவரின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கேட்டுக்கொண்டதால் தொண்டூழியர்களை முன்கூட்டியே இணையம் வாயிலாக பதிவு செய்யும் இயக்கத்தை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சிவக்குமார் இத்தகவலை வெளியிட்டார்.