
பத்து மலை, ஜூலை 29 – எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை, பத்துமலை வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஓமம் விழா மிக விமரிசையாக நடைபெறவுள்ளது என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.
துர்கை ஆலய வழிபாட்டின் முக்கிய அம்சமான இந்த சண்டி ஓமம், கடந்தாண்டு துர்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு பிறகு 48வது மண்டல நாளன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் நடைபெறும் இந்த மிகப்பெரிய சண்டி ஓமத்தில் பக்த மெய்யன்பர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டும் என டான் ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் கோட்டு மலை பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தி பெருவிழா மிக பெரிய அளவில் நடைபெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
தொடர்ந்து பேசிய அவர், நவம்பரில் கும்பாபிஷேக விழா நடைபெறும் என்றும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இதனிடையே, ஆலயங்களில் நடைபெறவிருக்கும் முக்கிய விழாக்களில் பக்த மெய்யன்பர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனவும் டான் ஶ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.