
கோலாலம்பூர் பந்தாய் டாலாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையைச் தொடர்ந்து ஆவணங்களை கொண்டிருக்காத 133 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியிருப்புவாசிகளின் புகார்களைக் தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு மேலாக திரட்டப்பட்ட உளவு தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் வான் முகமட் சவ்பி வான் யூசோப் ( Wan Mohammed Saupee Wan Yusoff) தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின்போது 200 தனிப்பட்ட நபர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.
அவர்களில் ஆவணங்களைக் கொண்டிருக்காத 19 மற்றும் 50 வயதுக்குட்பட்ட 133 பேர் குடிநுழைவுக்கான பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 102 ஆண்கள் மற்றும் 32 பெண்கள் இருந்தபோதிலும் இவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியர்கள் என வான் முகமட் கூறினார்.
60 இந்தோனேசியர்களுடன் , 31 மியன்மார் பிரஜைகள், 27 வங்காளதேசிகள், 12 பாகிஸ்தானியர்கள் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.



