Latestமலேசியா

குவாலா மூடாவில் காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை 1 கிலோ மீட்டர் தூரம் துரத்திய கார்: வைரல் வீடியோ குறித்து போலீஸ் விசாரணை

குவாலா மூடா, ஆகஸ்ட்-15- 2 ஓட்டுநர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒருவரை ஒருவர் துரத்திச் சென்று மோதலில் ஈடுபடக் காரணமான ஒரு விபத்து குறித்து, கெடா, குவாலா மூடா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற்பகல் 1.35 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் Toyota Corolla காரோட்டி, Nissan Grand Livina காரை மோதித் தள்ளினார்.

இதையடுத்து Grand Livina ஓட்டுநர், Toyota Corolla காரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்றார்.

தாம் பின் தொடரப்படுவதை உணர்ந்த Corolla ஓட்டுநர், காரைத் திருப்பி Grand Livina-வின் வலது பக்கத்தில் மோதியதாக, குவாலா மூடா போலீஸ் கூறியது.

பின்னர் காரிலிருந்து வெளியேறிய அவ்வாடவர், Grand Livina ஓட்டுநரை திட்டி விட்டி அங்கிருந்து கிளம்பினார்.

இவையனைத்தும் வைரலான வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஆபத்தாக வாகனமோட்டியது தொடர்பில் அவ்விருவரும் விசாரிக்கப்படுகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!