Latestமலேசியா

பந்திங் வீட்டில் தீ விபத்து: 6 வயது சிறுவன் உயிரிழப்பு

பந்திங் வீட்டில் தீ விபத்து: 6 வயது சிறுவன் உயிரிழப்பு

பந்திங், பிப்ரவரி-15,

சிலாங்கூர் பந்திங்கில் இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் 6 வயது சிறுவன் தீயில் உடல் கருகி மாண்டான்.

தாமான் பைடூரியில் 2 மாடி டேரஸ் வீட்டில் தீ ஏற்பட்டது.

10 பேர் வசித்த வீட்டில் 9 பேர் உயிர் தப்பிய நிலையில், மேல்தளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தான்.

உயிர் தப்பியவர்களில் 30 வயது ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

தீயணைப்புத் துறையின் 18 வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, காலை 7 மணிக்கு தீயை கட்டுப்படுத்தினர்.

தீயில் அவ்வீடு 84 விழுக்காடு சேதமடைந்துள்ளது.

தீக்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!