Latestமலேசியா

பயங்கரவாதம் தொடர்பாக 2 வங்காளதேச ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்,ஆகஸ்ட்-15,இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு வங்கதேச ஆடவர்கள் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

31 வயதுடைய Md Mamun Ali முகநூலை பயன்படுத்தி IS பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டான்.

2023 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதிக்கும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதிக்குமிடையே Sahifulla Islam என்ற முகநூல் கணக்கைப் பயன்படுத்தி இக்குற்றத்தை புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130J(1)(a) யின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை அல்லது 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இதனிடையே IS பயங்கரவாத கும்பலின் கொடியின் படத்தை கை தொலைபேசியில் வைத்திருந்ததாக 27 வயதுடைய Refat Bishat என்ற மற்றொரு நபர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

கடந்த ஜூலை மாம் 10 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் Larkin தொழில்மயப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அவன் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிபதி Ahmad Kamal Arifin Ismail முன்னிலையில் குற்றச்சாட்டப்பட்டான்.

அந்த இருவர் மீதான குற்றச்சாட்டு மறுவாசிப்புக்காக செப்டர்பர் 12 ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!