
கோலாலம்பூர், மார்ச் 13 – அரசு அல்லது தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் அனைத்து கௌரவ டாக்டர் பட்டங்களும் இனி உயர்கல்வி அமைச்சின் மதிப்பீடு மற்றும் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
தற்போது அரசு பல்கலைக்கழங்கள் இந்த மதிப்பீடு வழிமுறையைப் பின்பற்றுகின்றன. ஆனால், சில தனியார் பல்கலைக்கழகங்கள் சுயமாகவே இந்த கெளரவ பட்டம் பெறுபவர்களை நிர்ணயித்துக் கொள்கின்றன என உயர்க்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abdul Kadir தெரிவித்துள்ளார்.
“வழங்கும் ஒவ்வொரு கெளரவப் பட்டம் பெறுநர்களும் சரியான தகுதியும் பின்புலமும் கொண்டிருப்பது மதிப்பீடு செய்யப்பட்டு அந்தப் பட்டியல் உயர்கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்ப்பம்போல இந்த டாக்டர் கெளரவப் பட்டங்களை வழங்குவதை தவிர்க்க இந்த நடைமுறையை அரசாங்கம் கூர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.