
டுங்குன், ஏப்ரல்-27-திரெங்கானு, டுங்குன் UiTM பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், மாணவி ஒருவரிடம் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரீகமாக நடந்துகொண்ட மர்ம நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், பொது இடத்தில் அந்த மாணவியைப் பார்த்து அநாகரீகமான செயலில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி நேற்று மதியம் 12.30 மணியளவில் இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
இதனை உறுதிப்படுத்திய டுங்குன் போலீஸ், உடனடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
பொது மக்களின் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு சந்தேக நபரை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனிடையே வைரலான வீடியோவைப் பார்த்த சில டுங்குன் வாசிகள், அதே ஆடவரின் இந்த அநாகரரீகச் செயலுக்கு தாங்களும் ஆளானதாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



