Latestமலேசியா

பள்ளிக்கு முன்புறம் சண்டை போட்டதாக 14 மாணவர்கள் உட்பட 16 பேர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஏப் 14- Iskandar Puteri, Bandar Selesa Jaya வில் ஒரு பள்ளிக்கு முன்புறம் நடந்த சண்டையில் ஈடுபட்ட மொத்தம் 14 மாணவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதற்கும், பொது இடத்தில் குழப்பம் விளைவித்ததற்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 147-ன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்று ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாட் ( Ab Rahaman Arsad) தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், ஒரு சந்தேக நபர் மற்றொரு சந்தேக நபரைக் காயப்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323-இன் கீழ் கூடுதல் குற்றச்சாட்டை எதிர்கொள்வார் என இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஒரு ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வேறு ஒரு சந்தேக நபர் மீதும் மற்றொரு சந்தேக நபரைக் காயப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் 323 ஆவது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்.

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் எந்தவொரு சண்டையையோ அல்லது குற்றச் செயல்களையோ சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அப்துல் ரஹ்மான் அர்சாட் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், பள்ளிப் பிள்ளைகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் அவர்களின் நடத்தையைக் கண்காணிப்பதிலும் பெற்றோர்களும், பள்ளிகளும், சமூகமும் பங்கு வகிக்க வேண்டும் என்று அப்துல் ரஹ்மான் அர்சாட் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!