
கோலாலம்பூர், ஆகஸ்ட்-13 – பள்ளி வளாகங்களில் சிகரெட் அல்லது வேப்பிங் புகைப் பிடித்ததாகக் கையும் களவுமாக பிடிபடும் ஆசிரியர்கள், விரைவிலேயே சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வர்.
அவர்களுக்கு அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
ஆசிரியர்கள், பொது வெளியில் அதுவும் மாணவர்கள் கண்ணெதிரே வேப்பிங் செய்வதை அமைச்சு ஒருபோதும் அனுமதிக்காது.
இது SGM எனப்படும் மலேசிய ஆசிரியர் தர நிர்ணயத்திற்கு எதிரானது ஆகும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எப்போதுமே ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்பதை SGM வலியுறுத்துவதை ஃபாட்லீனா சுட்டிக் காட்டினார்.
மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் அவ்வாறு சொன்னார்.