Latestமலேசியா

பழுதுபார்ப்புப் பணி நிறைவு; ETS, KTM Komuter மீண்டும் இயக்கம்

கோலாலம்பூர், டிசம்பர்-1 – சாலாக் செலாத்தான் முதல் முதல் செர்டாங் வரை மின்கம்பி பழுதுபார்ப்புப் பணிகள் நேற்றிரவு முடிவடைந்ததை அடுத்து, ETS மற்றும் KTM Komuter இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ஆனால், பயணிகள் சற்று தாமதத்தை எதிர்நோக்கலாம்…

குறிப்பாக Batu Caves – Pulau Sebang – Batu Caves வழித்தடத்தில் ETS, Komuter சேவைகள் தாமதமாகலாம்.

சேவை மீண்டும் தொடங்கியிருப்பதால் இரயில் அட்டவணையை பழையபடி மறுசீரமைக்க வேண்டியிருப்பதே அதற்குக் காரணம் என KTMB அறிக்கையொன்றில் கூறியது.

இதையடுத்து, KL Sentral – Kluang வரையிலான ETS இரயில் பயணிகள் KL Sentral மற்றும் Bandar Tasik Selatan-னிலிருந்து பேருந்து மூலம் Kajang 2 கொண்டுச் செல்லப்பட்டனர்; பின்னர் அங்கிருந்து ETS இரயிலில் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மின்கம்பி கோளாறால் முன்னதாக ஞாயிறு காலை முதல் ETS, Komuter இரயில் சேவைகள் தடங்கலைச் சந்தித்தன.

இந்த இக்கட்டான நேரத்தில் பொறுமைக் காத்த பயணிகளுக்கு KTMB நன்றித் தெரிவித்துக் கொண்டது.

பயணிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 03-9779 1200 என்ற எண் அல்லது KTMB-யின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!