Latestமலேசியா

பஹாங் ரவுப்பில் புயல் தாக்கம்; எட்டு வீடுகள் சேதம்

ரவுப், அக்டோபர் 7 –

நேற்று ராவுப் கம்போங் மலாய் செம்பாலிட், தாமான் அமலினா லெஸ்தாரி மற்றும் ஜாலான் லிபிஸ் (Kampung Melayu Sempalit, Taman Amalina Lestari serta Jalan Lipis) பகுதிகளில் புயல் தாக்கி, எட்டு வீடுகள் சேதமடைந்தன.

சில வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறைகள் சேதமடைந்தன என்றும் ஆனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ராவுப் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு (JPBD) அறிவித்துள்ளது.

மலேசிய பொதுமக்கள் பாதுகாப்புப் படை (APM), சம்பவ இடத்துக்கு சென்று சுத்தம் செய்து உணவுகள் வழங்கி பாதிக்கப்பட்டவருக்கு உதவி கரம் நீட்டியது.

மொத்தம் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்காலிக இடமாற்ற மையம் இன்னும் திறக்கப்படவில்லை என்று அறியப்படுன்றது.

புயல் தாக்கத்தின் போது, ஜாலான் லிப்பிஸ் பகுதியில் தேங்காய் மரம் மற்றும் இரும்பு தூண் ஆகியவை வீட்டின் சமையலறை மீது விழுந்ததாக அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள்  தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!