
பஹாவ், ஜனவரி-15-நெகிரி செம்பிலான் பஹாவில், 34 வயது தந்தை ஒருவர் தனது 10 வயது மகனை அத்தியாவசிய பொருட்களை திருடச் செய்த குற்றச்சாட்டில் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நிகழ்ந்தது.
சிறுவன் நெஸ்கஃபே பாக்கெட்டை திருடியபோது பிடிபட்டான்.
விசாரணையில், தந்தை பலமுறை மகனை மைலோ உள்ளிட்ட பொருட்களை திருடச் செய்தது தெரியவந்தது.
சிறுவன் மறுத்தால், தந்தை மிரட்டுவதோடு அடிக்கவும் செய்வதாக போலீஸார் கூறினர்.
அந்த தந்தைக்கு ஏற்கனவே 7 குற்றப் பதிவுகள் உள்ளன.
போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளும் அவற்றிலடங்கும்.
தற்போது 2 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு, தந்தை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டான்.



