
பாகிஸ்தான், ஆகஸ்ட் 6 – பாகிஸ்தான் மலை பகுதியில் உருகும் பனிப்பாறையில் 28 ஆண்டுகளாக காணாமல் போன ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த உடலில் 28 ஆண்டுகளுக்கு முன்பு அந்நபர் அணிந்திருந்த ஆடைகள் அப்படியே இருந்தன என்றும் நசீருதீன் என்ற பெயருடன் ஒரு அடையாள அட்டையும் இருந்தது என்றும் உள்ளூர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் பனிப்பொழிவு குறைந்து வருவதால், பனிப்பாறைகள் நேரடி சூரிய ஒளியில் வெளிப்பட்டு, அவை வேகமாக உருகுகின்றன.
இறந்த நசீருதீனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்றும் அவர் காணாமல் போன நாளில் குதிரையில் தனது சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தார் என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில், ஒரு மனித உடல் பனிப்பாறையில் விழும்போது, கடுமையான குளிர் அதை வேகமாக உறைய வைத்து, சிதைவைத் தடுக்கிறது என்று பல்கலைக்கழக பேராசிரியர் கூறியுள்ளார்.