Latestமலேசியா

பாசீர் மாஸ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கர்ப்பிணி பெண் மரணம்; தேடப்பட்ட சந்தேக நபர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பாசீர் மாஸ், ஜூலை 24 – பாசீர் மாஸ், Kampung Repek கில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஏழு மாத கர்ப்பிணி மரணம் இறந்து கிடந்தது தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக கடந்த மூன்று ஆண்டு காலமாக போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆடவன் கைது செய்யப்பட்டான்.

24 வயதுடைய அந்த சந்தேக பேர்வழியை Kampung Bukit Lata வில் இரவு ஏழு மணியளவில்
பொது நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர். அந்த நபர் 24 வயதுடைய மற்றொரு நண்பருடன் கைது செய்யப்பட்டதாக பாசீர் மாஸ் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் கமா அசுரல் முகமட் ( Kama Azural Mohamad ) தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட வாகனம் ஒன்றில் அந்த இரண்டு ஆடவர்களும் இருந்ததை போலீசார் கண்டதோடு அந்த இருவரும் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளதோடு விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் ஏழு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!