
பாயன் லெப்பாஸ், ஏப் 2 – பினாங்கு, பாயன் லெப்பாஸில் கார் மோதியதில் 71 வயது பாதசாரி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
பிற்பகல் மணி 2.55 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், பாயன் லெப்பாஸ் சுற்றுச்சாலைக்கு அருகில் ஜாலான் துன் டாக்டர் அவாங் சாலையைக் கடக்கும்போது பாதிக்கப்பட்டவர் மீது கார் மோதியது.
பாயன் லெப்பாஸிலிருந்து ஜார்ஜ் டவுன் நோக்கி 19 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற கார் , அந்த ஆடவர் மீது மோதியதாக பினாங்கு வட கிழக்கு மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintendent லீ சுவி சாகே ( Lee Swee Sake ) தெரிவித்தார்.
கடுமையான காயத்திற்குள்ளான அந்த நபர் பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும் இன்று அதிகாலை அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
அலட்சியமாக அல்லது அபாயகரமான வாகனம் ஓட்டியதால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)-ன் பிரிவின் கீழ் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான 13 வினாடி காணொளி ஒன்று பின்னர் வைரலாகியது.
அந்த நபர் சாலையைக் கடந்து கிட்டத்தட்ட பாதி தூரத்தை அடைவதற்குள் வாகனம் மோதியதை அந்த காணொளில் தெரிந்தது.



