
பினாங், அக் 1 –
பாகான் இந்தியர் கேளிக்கை விழா பட்டர்வெர்த்தில் செப்டம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பட்டர்வெர்த் Uptownனில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ ,பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாகான் மக்களிடையே ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்த இருநாள் விழாவில் பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
இந்த கேளிக்கை நாளின் இரண்டாம் நாளன்று பல்வேறு போட்டிகளுடன் , சுவையான உணவுகளை விற்பனை செய்வதற்கு அங்காடிக் கடைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்திய சமூகம் தொடர்பான பொருட்களை விற்கும் இதர பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
Darkey குழுவினரின் பாடல்களும் நடனங்களுடன், பரத நாட்டியம்,
சிலம்பம், தெக்குவாண்டோ போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சிறார்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் ஜூனியர் பாடல் போட்டியும் நடைபெற்றன.
இதனிடையே இந்த இரண்டு நாள் விழாவில் பாகான் தொகுதியில் தீபாவளியை கொண்டாடும் வசதி குறைந்தவர்களுக்கு முதல் நாளன்று உதவிப் பொருட்கள் கொண்ட 30 கூடையையும் இரண்டாவது நாளன்று 100 பேருக்கான உதவி பொருட்கள் கூடையும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் குவான் எங் 10,000 ரிங்கிட் நிதியையும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினான சுந்தரராஜூ 5,000 ரிங்கிட் உதவியையும் வழங்கியதாகவும் அவர்களுக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவித்துக கொள்வதாக குமரன் தெரிவித்தார்.
இதனிடையே கட்டாரில் நடைபெறும் உலக பொது சிலம்பம் போட்டியில் பங்கேற்கச் செல்லும் பினாங்கு சிலம்ப சங்க போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2,000 ரிங்கிட்டை குமரனும் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரனும் வழங்கினர்.