மலேசியா

ஒப்பந்தப்படி மொட்டை மாடி தோட்டத்தை கட்டவில்லை; குடியிருப்பாளர்களுக்கு RM3 மில்லியன் வழங்க அடுக்குமாடி மேம்பாட்டாளருக்கு உத்தரவு

ஜோகூர் பாரு, டிசம்பர்-13, ஜோகூர் பாருவில் Midori Green அடுக்குமாடி வீட்டை வாங்கியவர்களுக்கு ஒப்பந்தப்படி மொட்டை மாடி தோட்டம் கட்டித் தராத மேம்பாட்டாளர், உரிமையாளர்களுக்கு மொத்தம் RM3 மில்லியன் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 39 பேருக்கு வீடுகளை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்காக, தாமதக் கட்டணமும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தை Austin Heights Sdn Bhd அப்பட்டமாக மீறியிருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

ஒப்பந்த ஆவணங்கள், விளம்பர புத்தகங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் கையேடுகளில், மொட்டை மாடித் தோட்டம் பொதுவான வசதிகளின் ஒரு பகுதியாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இப்படி ஒப்பந்தத்தில் கூறிவிட்டு பின்னர், அந்த வசதி நடைமுறைக்கு சாத்தியமற்றது, திட்டத்தில் விடுபட்டது அல்லது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என சாக்குபோக்குக் கூறி, பிரதிவாதி தனது சட்டப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது” என 50 வீட்டு உரிமையாளர்கள் இவ்வழக்கைத் தொடுத்திருந்தனர்.

இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்குச் சாதகமாக வந்துள்ள இத்தீர்ப்பு, வீடு வாங்குபவர்களுக்கு வாக்குறுதிப்படி வசதிகள் வழங்கப்படாவிட்டால், சட்டரீதியாக நியாயம் பெறலாம் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!